அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதன்படி அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் 4 நாட்களாக குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் திரு.குணவர்தன தெரிவித்தார்.
இன்று (5) கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.




