25.7 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இந்தியா

திருமணமான 6 மாதத்தில் கணவன், மனைவி தற்கொலை; ஆண்குறி நரம்பு உடைந்ததால் குழந்தை பிறக்காது என மன உளைச்சல்!

தமக்கு குழந்தை பிறக்காது என்ற அச்சத்தில் இளம் தம்பதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் சக்திவேல் (22), மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் தங்கி காயலான் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி (20), என்ற பெண்ணுடன் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த நிலையில் இருவரும் மதுரவாயலில் வசித்து வந்தனர். இன்று காலை இவரது உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது செல்போனும் எடுக்கவில்லை, கடையும் திறக்கவில்லை, வீட்டின் கதவும் நீண்ட நேரமாக திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்து கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர். மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் “ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை செய்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்மதம் இல்லை” என எழுதியுள்ளனர்.

திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் உடலுறவு கொண்டபோது சக்திவேலின் ஆண்குறியில் நரம்பு உடைந்து விட்டதாகவும் அதன் பிறகு அவரால் உடலுறவு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை ஏதும் அணுகாமல் இருந்து வந்ததாகவும் தங்களுக்கு குழந்தை பிறக்காது என்ற மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment