29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
குற்றம்

13 வயது சிறுமி கர்ப்பம்: 16 வயது சகோதரன் கைது!

தனது 13 வயது சகோதரியுடன் உடலுறவில் ஈடுபட்டு, அவர் கர்ப்பம் தரிக்க காரணமாக இருந்த 16 வயது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை மாவட்டம், அத்திமலை பொலிஸ் பிரிவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

13 வயதான சிறுமி வயிற்று வலியினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை பெற்றோர் மொனராகலை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது 16 வயது அண்ணனால் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட விடயம் தெரிய வந்தது.

பெற்றோர் வீட்டில் இல்லாத சமயங்களில் 16 வயது அண்ணன், தனது தங்கையுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக இது நடந்து வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment