26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
இந்தியா

காதல் ஜோடி பாதுகாப்பு கோரி தஞ்சம்!

கணக்கம்பாளையத்தை சேர்ந்த பட்டதாரி பெண் காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் பகவதி நகரை சேர்ந்தவர் சென்னியப்பன் மகள் சங்கீதா. பி.எஸ். பட்டதாரியான இவர் கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் கோபுரகண்ணன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் தொடர்பாக பெண்ணின் வீட்டிற்கு தெரியவே அந்தஸ்து காரணமாக ஏற்க மறுத்தனர். அதனால், வீட்டை விட்டு வெளியேறிய சங்கீதா காதலனுடன் நண்பர்கள் உதவியுடன் சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து, கவுந்தப்பாடி போலீசார் இருதரப்பின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சங்கீதாவின் பெற்றோர் அந்தஸ்து காரணமாக ஏற்க மறுக்கவே கோபுரகண்ணன் பெற்றோர் இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் காதல் ஜோடி கோபுரகண்ணன் வீட்டிற்கு சென்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தங்கம் கடத்திய நடிகை கைது!

Pagetamil

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

Leave a Comment