க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது!

Date:

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் (1) நிறைவடையவுள்ளது.

2021 டிசம்பரில் நடைபெறவிருந்த பரீட்சை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஐந்து மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே 23 ஆம் திகதி பரீட்சை தொடங்கியது.

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 407,129 பாடசாலை பரீட்சார்த்திகளும் 110,367 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர்.

3,842 பரீட்சை மையங்களிலும், 542 ஒருங்கிணைப்பு மையங்களிலும் பரீட்சை நடத்தப்பட்டது.

இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் யாரேனும் தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டால், அவ்வாறான மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சை நிலையங்களிற்கு செல்ல முடியாதவர்கள் 117 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட வரைபு தயார் என்கிறது ஈரான்: மறுக்கிறது அமெரிக்கா!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்குவது, ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை மீட்டெடுப்பது...

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட புதிய எலி வகை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள தும்பர உலக பாரம்பரிய வனக் காப்பகத்தில் அமைந்துள்ள...

புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்