25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

9 வயது சிறுமி ஆயிஷா கொலை: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு!

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 99 வயதான சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை பிரதான நீதவான் ஜெயருவன் திஸாநாயக்க இன்று (09) உத்தரவிட்டார்.

சந்தேகநபர் பண்டாரகம, அட்டுலுகம முஸ்லிம் கொலனியைச் சேர்ந்த 29 வயதான மொஹமட் பாரூக் மொஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 27ஆம் திகதி பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய மொஹமட் அக்ரம் பாத்திமா ஆயிஷா என்பவரை படுகொலை செய்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டத்தரணிகள் அஜித் பி பெரேரா, சுகத் ஹந்துங்கே, ஜயந்தி டி சில்வா மற்றும் துல்ஷிகா ரத்நாயக்க ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் ஆஜராகியிருந்ததுடன், சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாகவில்லை.

குற்றவியல் சட்டத்தின் 296, 345 354 மற்றும் 355 ஆகிய பிரிவுகளின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் தனிப்பட்ட வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு அனுமதி கோரியதையடுத்து இன்று (01)  பிரதம நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்கு அழைக்கப்பட்டார்.

சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் விசேட பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் சென்றதுடன், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து மீண்டும் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது, ​​அவரைப் பார்ப்பதற்காக நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே பலர் காத்திருந்ததை காணமுடிந்தது.

இந்த வழக்கு ஜூன் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment