மிருசுவிலில் காணாமல் போன 8 வயது சிறுமி மீட்கப்பட்டார்.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இன்று மாலை 8 வயதான சிறுமியொருவர் காணாமல் போனதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டிலிருந்த சிறுமி காணாமல் போனதையடுத்து, பிரதேசவாசிகள் தேடுதலில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணித்தியால தேடுதலின் பின்னர் இரவு 8 மணியளவில் சிறுமி மீட்கப்பட்டார்.
சிறுமி வழி தவறி பற்றைக்காட்டு பகுதிக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
2
+1
1