சம்பியன்ஸ் லீக் குழப்பம்: பாரிஸ் தொழிற்சங்க போராட்டம் வெற்றியென அறிவிப்பு!

Date:

பாரிஸ் நகரில் நடந்த சம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் குழப்பமும் சர்ச்சையும் ஏற்பட்டதைத் தொடர்ந்து தங்களது வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாய் அந்நகரின் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ரயில் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் சென்ற சனிக்கிழமை நடைபெற்ற அந்த ஆட்டத்தைக் காணச்சென்ற ரசிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

லிவர்பூல் அணியின் ரசிகர்கள் ஆயிரக் கணக்கானோர் அரங்கத்தினுள் நுழைவதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.

அவர்களைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.

அந்தச் சம்பவம் உலக அளவில் பேசப்பட்டது. ரசிகர்களை அரங்கத்திற்கு அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகத் தொழிற்சங்கங்கள் கூறின.

பிரான்ஸுக்கும் டென்மார்க்கிற்கும் இடையே பாரிஸில் நடைபெறவுள்ள காற்பந்துப் போட்டியின்போது மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அவை கூறியுள்ளன.

ரயில் ஊழியர்கள் கிருமித்தொற்றுக் காலத்தில் செய்த வேலைக்கு மிகை-ஊதியமாக 1,600 டொலர் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் ஓட்டுநர்களின் எண்ணிக்கையும் குறைவாய் உள்ளதாக அவர்கள் குறைகூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

களுத்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வெட்டுவக்கடே, முஸ்லிம் மசூதி வீதி பகுதியில்...

குவைத்தில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

நாட்டின் தெற்குப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் புரட்சிக்...

சீமானுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் சீர்வரிசையுடன் வந்த அனிதா ராதாகிருஷ்ணன்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு குழந்தை பிறந்​திருக்​கும் நிலை​யில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்