27 C
Jaffna
January 2, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது அந்த அணி.

நடப்பு சீசனில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது குஜராத் அணி. தனியொரு வீரரை நம்பி இருக்காமல் ஆடும் லெவனில் இடம் பெற்று விளையாடும் ஒவ்வொரு வீரரும் மேட்ச் வின்னராக அந்த அணிக்காக ஜொலித்துள்ளனர். கில், சாஹா, ஹர்திக், மேத்யூ வேட், டேவிட் மில்லர், திவாட்டியா, ரஷீத் கான், ஷமி, யாஷ் தயாள், ஃபெர்குசன், சாய்கிஷோர் என ஒவ்வொருவருமே அந்த அணியின் வெற்றியில் அங்கம் வகித்துள்ளனர்.

இறுதிப் போட்டியில் 131 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் மிகவும் நிதானமாக அவசரம் கொள்ளாமல் விளையாடியது குஜராத் அணி. தரமான பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றி நிச்சயம் தரமான வெற்றி தான்.

அதுவும் குஜராத் மண்ணில் உள்ள அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் முதல் சீசனிலேயே கோப்பையை வென்றுள்ளது குஜராத். இந்த முறை 10 அணிகள் ஐபிஎல் அரங்கில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. காலம் காலமாக ஐபிஎல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அணி அனைத்தும் முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணியின் கப்டன் சஞ்சு சாம்சன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பட்லர் உடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். பவுண்டரி மூலம் ரன் கணக்கை தொடங்கிய சாம்சன் குஜராத் கப்டன் ஹர்திக் வீசிய பந்தில் சாய் கிசோரிடம் கட்ச் கொடுத்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒரு பக்கம் பட்லர் சிறிது அதிரடி காட்ட தொடங்க மறுபக்கம் விக்கெட் வீழ்ச்சி தொடர்ந்தது.

அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 39 ரன்கள் எடுத்து பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிம்ரன் ஹெட்மயர் விக்கெட்டை தானே பந்துவீசி தானே கேட்ச்சும் பிடித்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா.

அதை தொடர்ந்து வந்த வீரர்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

131 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் சாஹா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் போல்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வேட் 8 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் – கப்டன் பாண்டியா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சஹால் இந்த ஜோடியை பிரித்து பாண்டியாவை 34 ரன்களில் வெளியேற்றினார்.

இருப்பினும் ஒருமுனையில் கில் நிதானமாக விளையாடி வர மில்லர் அவருடன் சிறப்பாக செயலபட்டார். இறுதியில் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஜோஸ் பட்லர் சாதனை

இந்த ஐபிஎல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஒரேஞ்ச் நிற தொப்பியை  வைத்து இருக்கும் பட்லர் இன்றைய போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வோர்னரை பின்னுக்கு தள்ளி பட்லர் 2வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி (973 ரன்கள் – 2016 ஆம் ஆண்டு ) 2வது இடத்தில் ஜோஸ் பட்லர் 863 ரன்கள், 3வது இடத்தில் வார்னர் (848 ரன்கள் – 2016) உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

Leave a Comment