நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு 74 வருட கால ஆட்சி காரணவில்லை என்றும், 2019 ஆம் ஆண்டு ஊடகங்கள் ஊடாக உயர்த்தப்பட்ட ஒரு நபருக்கு பொதுமக்கள் வாக்களித்ததன் காரணமாக உருவாக்கப்பட்டது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமான அளவு குறைவாக இருந்ததாக ஃபேஸ்புக்கில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு பாணின் விலை ரூபா 50 ஆகவும், எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1350 ரூபாவாகவும், சீமெந்துப் பொதி ஒன்றின் விலை 850 ரூபாவாகவும் ஒரு லீற்றர் டீசல் ரூ.120க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரு கிலோ அரிசி ரூ.100க்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டது என்றார்.
குறைந்த பட்ச பஸ் கட்டணம் ரூபா 12 என சுட்டிக்காட்டினார்.
எனவே இது 74 வருட கால பிரச்சினையல்ல என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.



