26.2 C
Jaffna
February 24, 2025
Pagetamil
குற்றம்

யாழில் 1 வருடத்தில் 6 வீடுகளில் திருடிய இளைஞன் கைது!

யாழில் கடந்த ஒரு வருட காலத்தில் 6 வீடுகளில் களவில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் , நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது , கடந்த 2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால பகுதியில் 6 வீடுகளில் தான் தங்க நகைகள் , பணம் என்பவற்றை களவாடியதாக தெரிவித்துள்ளார்..

சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் தேவி தொடருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் – மூவர் கைது

east tamil

யாழில் பண மோசடி – வெளிநாட்டவர்களை ஏமாற்றிய பெண் கைது!

east tamil

கொட்டாஞ்சேனையில் தொடரும் துப்பாக்கிச்சூடு

east tamil

கொழும்பில் நூதன வாகன மோசடி

east tamil

பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் நெல்லியடியில் கைது

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!