லிட்ரோ எரிவாயு லிமிடெட், நாளை இரண்டு கப்பல்களுக்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த எதிர்பார்க்கிறது.
இரண்டு கப்பல்களில் இருந்தும் எரிவாயு இறக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டில் போதுமான அளவு எரிவாயு இருக்கும் என லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ நிறுவனத்திடம் அடுத்த ஆறு நாட்களுக்கு போதுமான அளவு எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், இன்று முதல் 80,000 சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொது நிறுவனங்களுக்கான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 80,000 சிலிண்டர்களில் 50,000 கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தலைவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1