அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை முழுமையாக கைப்பற்றியது ரஷ்யா: 2,439 உக்ரைன் இராணுவம் சரண்!

Date:

மரியுபோல் நகரின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை ரஷ்யப் படைகள் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. நேற்று மே 20 ஆம் திகதி ஆலையின் நிலவறைகளை ரஷ்ய படைகள் முழுமையா கைப்பற்றின.

ஆலைக்குள் பதுங்கியிருந்த கடைசி உக்ரைன் இராணுவமும் சரணடைந்து விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மே 16 முதல், 20ஆம் திகதி வரையான நாட்களில் அசோவ்ஸ்டல் ஆலைக்குள்ளிருந்த 2,439 உக்ரைனிய இராணுவத்தினர் சரணடைந்துள்ளனர்.

அசோவ்ஸ்டல் ஆலை முழுமையாக கைப்பற்றி, மரியுபோல் முழுமையாக கைப்பற்றி, இந்த நடவடிக்கை வெற்றியாக முற்றுப்பெற்றுள்ளதாகவும், அங்கிருந்த உக்ரைனியர்கள் அனைவரும் சரணடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் அறிக்கை செய்தார்.

மே 20 அன்று, 531 உக்ரைனிய இராணுவத்தினர் அசோவ்ஸ்டாலை விட்டு வெளியேறி சரணடைந்தனர்.

ஆலைக்குள் நிலை கொண்டிருந்த அசோவ் படையணியின் தளபதி மீது மரியுபோல் மக்கள் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், அவரை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்பதாலும், விசேடமாக கவச வாகனத்தில் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மரியுபோலில் இறுதியாக நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் பாதுகாப்பாக வெளியேறும் நடவடிக்கை மேற்கத்திய பங்காளிகளின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்,

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்