இலங்கையிலிருந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலியா எல்லைக் காவல் படையினர் தடுத்து நிறுத்தியுளள்னர்.
இன்று சனிக்கிழமை காலை கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கடற்கரையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற படகு ஒன்று எல்லைப் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அவுஸ்திரேலியாவில் இன்று தேர்தல் நடந்து வருகிறது. புகலிடக் கோரிக்கையாளர் படகுகளைத் தொடர்ந்து நிறுத்துவதற்கு அஸ்திரேலியர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் ஸ்கொட் மொரிசன் சனிக்கிழமை கூறினார்.
மொரிசன் இன்று தெரிவிக்கையில் “இந்தப் படகை நிறுத்துவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
தடுக்கப்பட்ட படகில் 15 பேர் இருந்துள்ளனர்.
இதேவேளை, கிழக்கு கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட 40 பேர் கடந்த சில தினங்களின் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1
1