வவுனியாவில் பெற்றோலுக்கு 1KM நீளமான வரிசை!

Date:

வவுனியாவில் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் பெற்றோல் விநியோகம் கடந்த சில தினங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மோட்டர் சைக்கிள், முச்சக்கர வண்டி, கார் என தமது வாகனங்களுக்கு பெற்றோல் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (20) காலை முதல் வவுனியா மாவட்ட செயலகம் அருகாமையில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பெற்றோலைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் தமது வாகங்களுடன் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்து இருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இதேவேளை, வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு தரப்பினர், அத்தியாவசிய தேவைக்குரிய அரச உத்தியோகத்தர்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு தேவையான ஆளணியினர் என அத்தியாவசிய தேவைகளுக்காக அரச உயர்மட்ட தீர்மானத்திற்கு அமைவாக பெற்றோல் களஞ்சியப்படுத்தபட்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்