இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த பெற்றோல் கப்பலுக்கு நேற்றிரவு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
அந்த கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி இன்று இரவு முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், பெற்றோல் நிரப்பு நிலையங்களை சென்றடைய 02 நாட்கள் ஆகும் என அமைச்சர் தெரிவித்தார்.




