எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச துறை ஊழியர்களை நாளை (20) பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் அனைவரும் தேவையில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தீரும் வரை இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.




