எம்.பிக்களுக்கு சலுகை விலையில் பெற்றோல் வழங்கப்படவில்லை!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக பகிரப்பட்ட பதிவுகள் பொய்யானவை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் ஒரு லீற்றர் எரிபொருளை 121.19 ரூபாவாக செலுத்தும் பதிவு இன்று காலை முதல் பரவி வருகிறது.

எவ்வாறாயினும், அரசாங்கத்திலோ அல்லது எதிர்க்கட்சிகளிலோ உள்ள எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தற்போதைய சந்தை விலைகளுக்கு மாறாக மானிய விலையில் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

பொலிஸ் விநியோகிக்கும் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ் அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எவருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்