25.4 C
Jaffna
January 21, 2025
Pagetamil
இலங்கை

121 ரூபாவிற்கு எம்.பிக்களிற்கு எரிபொருளா?; அனைவருக்கும் இனி வரிசை: நாடாளுமன்றத்தில் இன்று சர்ச்சை!

நாரஹேன்பிட்டி பொலிஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கான எரிபொருள் விற்பனை இன்று (19) முதல் இடைநிறுத்தப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியின்மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு நாரஹேன்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 121 ரூபாவிற்கு எரிபொருள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இயந்திரத்தில் விலை காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் குழுமி எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மேலும் கூறியதாவது. நேற்றிரவு முதல் இந்த சம்பவம் பற்றி தவறான கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த தவறான கருத்து காரணமாக பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதற்கு முன்னர் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் சந்தை விலையை விட குறைந்த விலையில் எங்கும் எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு அனுமதித்ததில்லை.  எதிர்காலத்திலும் கொடுக்கப்படாது.

எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இன்று சமூகத்தில் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யுமாறு கோரியிருந்தார்கள்.

இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு எரிபொருள் வழங்கும் ஏற்பாட்டை செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அதன்படி உரிய தொகையை செலுத்திய பிறகே போலீசார் எரிபொருளை வழங்குகின்றனர்.

ஆனால், பொலிசாரின் நிரப்பு நிலையத்தில் பெரும் தவறு நடந்துள்ளது. தற்போதுள்ள இந்த டிஸ்பென்சர் புதுப்பிக்கப்படவில்லை. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளின் முன்னர்தான் 121 ரூபாவிற்கு எரிபொருள் விற்கப்பட்டது.

அதன்படி இன்று காலை முதல் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக நிறுத்துமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அப்டேட் செய்யாதது குறித்து விசாரணை நடத்துமாறு கூறியுள்ளோம் என்றார்.

இதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் சர்ச்சையேற்பட்டது. இந்த விவகாரம் குறித்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர்,

“சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளில் கலந்துகொள்வதற்கான தட்டுப்பாடு காரணமாக எரிபொருளைப் பெறுவது கடினம் என்று கூறியதுடன், அவர்கள் எரிபொருளைப் பெறுவதற்கு சில ஏற்பாடுகளைச் செய்யுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தனர். எரிபொருளைப் பெற முடியாவிட்டால் சில ஹோட்டல் தங்குமிடங்களையும் அவர்கள் கோரினர்,” என்று கூறினார்.

பின்னர் கருத்து தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘இந்த வாரம் பாராளுமன்றத்திற்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குமாறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இந்த வாரமே வழங்குவதற்கு பொலிஸ் கராஜில் அனுமதி கோரினோம்.

9ஆம் தேதி இந்த நாட்டில் பயங்கரமான நிலைமையேற்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. எம்.பி.க்கள் இறக்கின்றனர். வீதிக்கு வர வழியில்லாத நிலையில் எம்.பி ஒருவர் வரிசையில் நிற்க நேர்ந்தால், இப்படிப்பட்ட சம்பவத்திற்கு யார் பொறுப்பு? எனவேதான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக இதனைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தோம். அப்படி வெறுப்பை விதைத்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் தெருவில் இறங்க முடியாது’ என்றார்.

அனைவருக்கும் வரிசை- தொழிற்சங்கங்கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு லீற்றர் ஒன்றுக்கு 121 ரூபா மானிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வேண்டுமாயின் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மானிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டை அடுத்து, நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வினவியதாகவும், பில்களை சரிபார்த்ததாகவும், சமூக ஊடக தகவல்கள் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்தியதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்ட நாரஹேன்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது வாகனத்திற்கு எரிபொருளை நிரப்ப விரும்பினால், அவர்கள் வரிசையில் வருமாறும், விசேட முன்னுரிமை வழங்கப்படக் கூடாது என, தாம் அறிவித்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்தன.

நாரஹேன்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து, விஐபிகள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட முன்னுரிமை வழங்குவதை நிறுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமக்கு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரமுகர்களிற்கு முன்னுரிமையளிப்பதற்கு, இரவிரவாக பல மணிநேரம் வரிசையில் நின்ற பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதன் விளைவாக, எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எரிபொருள் தேவைப்பட்டால், அனைத்து மக்களையும் போல வரிசையில் காத்திருக்க வேண்டும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாகொடவில் வாக்குவாதம் மோதலுக்கு மாறியதில் ஒருவர் உயிரிழப்பு

east tamil

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கையெழுத்து போராட்டம் நிறைவு

east tamil

விபத்தில் பெண் பலி

Pagetamil

கடுப்பான அப்பா: வீட்டுக்கு தாமதமாக வந்த மகன்… வாயில் பாய்ந்த ஈட்டியுடன் வைத்தியசாலையில்!

Pagetamil

1ம் தர மாணவர் சேர்க்கை – இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது

east tamil

Leave a Comment