ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல் மற்றும் டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், எரிபொருள் விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இருப்பினும், வரிசைகள் முற்றிலும் குறைக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அவர் கூறினார்.
இதேவேளை, போதியளவு எரிவாயு சிலிண்டர்கள் நேற்று இறக்கி வைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் உறுதியளித்த போதிலும், அவர்கள் அதனைச் செய்யத் தவறியதாக பிரதமர் தெரிவித்தார்.
இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு லிட்ரோ காஸ் தலைவருக்கு பணிப்புரை விடுத்ததாகவும், அதேவேளை பொது நிறுவனங்களுக்கான குழு விசாரணைகளுக்காக லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளை அழைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.




