புறா வளர்ப்பில் போட்டி: யாழில் புறாக்கூட்டை பெற்றோல் ஊற்றி எரித்த இளைஞர்கள்!

Date:

யாழில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டி மனப்பான்மையால் 50 புறாக்கள் விசமிகளால்  பெற்றோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று பகல்வேளையில் கொட்டடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ். நகரில் பூட்டுத் திருத்தும் தொழில் புரியும் ஒருவரது வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்ற சமயம் கூட்டிற்குள் ஒரு போத்தல் பெற்றோலை முழுமையாக வைத்துவிட்டு மேலும் ஒரு போத்தல் பெற்றோலை கூட்டைச் சுற்றி ஊற்றி தீவைத்துள்ளனர்.

தீ பரவி கூட்டின் உள்ளே வைத்த பெற்றோல் போத்தலில் பரவிய சமயம் முழுமையாக வைத்த பெற்றோல் போத்தல் பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறி தீ மேலும் பரவியுள்ளது.

சத்தம் கேட்டு கூடிய அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபோதும் 40ற்கும் மேற்பட்ட புறாக்கள் தீயின் காரணமாக இறந்துவிட்டன.

இந்த விசமத்தனமான செயல் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டபோது பறவைகள் வளர்ப்பிற்கான அனுமதி இன்மை காரணமாக முறைப்பாடாக பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...

போலி வைத்தியர் கைது!

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்