நாவிதன்வெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பொலிசாருக்கும் வழங்கப்பட்டது!

Date:

முள்ளிவாய்க்கால் வாரம் கடந்த மே12 ஆம் திகதி தொடக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகிறது.

இதில் ஒரு அங்கமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று மே 16ஆம் திகதி அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியில் இலங்கை தமிழரசு கட்சி பிரதேச கிளையினரால் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, வீதியால் வாகனத்தில் சென்ற பொலிசாரும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

டரம்ப், புடின், ஷி சந்திப்பை உறுதி செய்த ரஷ்யா

வரும் வாரத்தில் ஷென்செனில் நடைபெறும் உச்சிமாநாட்டில், ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனாவின்...

மட்டக்களப்பில் குரங்கு கடித்ததில் இதுவரை 5 பேர் படுகாயம்

மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை...

விண்வெளியில் இருந்து திரும்பிய Starship! இயந்திரக் கரங்களால் பிடித்து சாதனை படைத்த SpaceX!

விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பிய தனது Starship விண்கலத்தை, ஏவுதளத்திலேயே பொருத்தப்பட்டிருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்