பிறந்த நாள் விருந்துக்கு அனைவரையும் அழைத்து விட்டு வீட்டில் பிணமாக கிடந்த மொடல் அழகியின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் ஷஹானா (20). மொடல் அழகியான ஷஹானா, ஒரு சில தமிழ், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். நகைக்கடை விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.
இவர் ஒன்றரை ஆண்டுகளின் முன் சஜ்ஜாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கோழிக்கோடு, பரம்பில் பஜாரில் ஒன்றரை மாதமாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டு யன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நேற்று அவரது பிறந்தநாள். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர், உறவினர், நண்பர்களை அவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். எனினும், முதல்நாள் இரவு தற்கொலை செய்துள்ளார்.
கணவரின் மடியில் ஷஹானா சோர்ந்த நிலையில் படுத்திருந்ததை கண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். பொலிசார் ஷஹானாவை கோழிக்கோடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பது தெரிய வந்தது.
ஷஹானா சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். ஷஹானாவின் கணவரே மரணத்திற்கு காரணம், மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என ஷஹானாவின் தாயார் குற்றம் சுமத்தினார். கணவர் சஜ்ஜாத் தொடர்ந்து பணத்துக்காக ஷஹானாவை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார்.
ஷஹானாவின் தாயார் கூறும் போது ஷஹானா தன்னை கணவர் துன்புறுத்தி வருவதாக ஏற்கனவே கூறி இருந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை. அவர் 20வது பிறந்தநாள் விழாவிற்கு எங்கள் அனைவரையும் அழைத்து இருந்தார் என கூறினார்.
ஷஹானாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தற்கொலை மரணம் என முடிவானது.
அவரது கணவர் சஜாத் தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ஷஹானாவின் உடலில் சிறு வெட்டுக்காயங்கள் உள்ளன. இது சித்ரவதையால் நடந்ததா என்பதை போலீசார் மேலும் விசாரிக்கிறார்கள்.
ஷஹானா வசித்த வாடகை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா, ஐஸ், மற்றும் எல்.எஸ்.டி போதைப்பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். ஷஹானாவின் உடலில் போதைப்பொருள் கலந்துள்ளதா என்பதை அறிய இரசாயன பரிசோதனை நடக்கும்.
ஷஹானாவின உடல் மாதிரிகள் இரசாயன பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு, உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு அடக்கம் செய்யப்பட்டது.