இன்று (14) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுஸூகி மாருதி காரில் வந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனேகர் விலை உயர்ந்த சொகுசு வாகனங்களை வைத்துள்ளனர். அதிலும் ஆளும் தரப்பு பக்கத்தில் அதிகமானவர்களிடம் விலை உயர்ந்த வாகனங்களே உள்ளன.
பாராளுமன்ற அமர்வு, ஆளுந்தரப்பு கட்சி கூட்டங்களில் சொகுசு வாகனங்கள் பவனியாக வரும்.
எனினும், இன்றைய கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ஏராளமாக எம்.பிக்கள் சாதாரண வாகனத்திலேயே வந்துள்ளனர்.
அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற என்ற சமூக ஊடக அபிப்பிராயம் அண்மை நாட்களில் தீவிரமடைந்துள்ளதுடன், ஆளுந்தரப்பு அரசியல் பிரமுகர்களின் சொகுச வாகனங்கள், வீடுகள் அண்மையில் தீ வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1