இமதுவ பிரதேசசபை தலைவர் போராட்டக்காரர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
பிரதேசசபை தலைவர் ஏ.வி.சரத் குமாரகேயின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று பெரமுனவினரால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
வன்முறையில் காயமடைந்த 216 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.