முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார்.
அதிகாலை வரை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட நிலையில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ, போராட்டக்காரர்கள் அதிகாலையில் முற்றுகையை தளர்த்திய பின்னர் பாதுகாப்பாக வெளியேறிச் சென்றுள்ளார்.
மஹிந்த தரப்பினர் நேற்று கட்டவிழ்த்து விட்ட வன்முறையை தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுஜன பெரமுனவினர் நையப்புடைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை துறந்தமை குறிப்பிடத்தக்கது.




