காலி முகத்திடல் போராட்டக்களத்திற்குள்ளும் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குண்டர் குழுவினர் மீது பொலிசார் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தினர்.
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகக்கூடாதென தெரிவித்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இந்த குழுவினர், அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட மைனா கோ கம குழுவினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, பலரை காயப்படுத்தினர். போராட்ட பந்தலுக்கு தீ வைத்தனர்.
பின்னர் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் ‘கோட்டா கோ கம’ பகுதிக்கு ஆக்ரோசமாக முன்னேறி சென்றனர்.
கோட்டா கோ கம போராட்டக்களத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட பொதுஜன பெரமுன குண்டர்கள் pic.twitter.com/bthwLwow8K
— Pagetamil (@Pagetamil) May 9, 2022
காலிமுகத்திடல் சுற்று வட்ட பகுதியில் பொலிசாரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். எனினும், ஒரு பகுதியினர் கோட்டா கோ கம போராட்டக்களத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், கூடாங்களையும் அடித்துடைத்தனர்.
பொலிசார் நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தினர்.
இதுவரை 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மைனா கோ கம போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ஆதரவு குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்: அலரி மாளிகையின் முன் பதற்றம்!
அலரி மாளிகைக்கு முன்பாக பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மைனா கோ கம போராட்டக்குழுவினர் மீது குண்டர் குழுவொன்று தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
அங்கு பதற்றமான நிலைமை நிலவுகிறது.
நேரலையை காண இங்கு அழுத்துங்கள்