Pagetamil
இலங்கை

ஐ.ம.ச- சட்டத்தரணிகள் சங்கம் இன்று சந்திப்பு!

நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த தொடர் முன்மொழிவுகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்திதெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று சந்திக்கவுள்ளனர்.

 “நாங்கள் இடைக்கால அரசாங்கத்தை ஆதரிப்பதா அல்லது அமைச்சுப் பதவிகளை எடுப்பதா அல்லது வெளியில் இருந்து இடைக்கால அரசாங்கத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து இப்போது ஒரு முடிவுக்கு வர முடியாது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்ட அறிக்கையில், “தற்போதைய ஜனாதிபதியை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள நடவடிக்கையானது தற்போதுள்ள தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முக்கிய தேவையாகக் கருதப்படுகிறது.

மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்கும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்மொழிவுகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியும், பங்காளிகளும் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகிந்த 4.6 மில்லியன் வாடகை செலுத்த வேண்டும் – அனுர

east tamil

செல்வம் அடைக்கலநாதனுக்கு பிடியாணை: பின்னணி என்ன?

Pagetamil

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

Pagetamil

மசாஜ் நிலைய குளியலறையில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 57 வயதுடையவர் உயிரிழப்பு

east tamil

20 நாட்களில் 8 துப்பாக்கிச் சூடு – 6 பேர் உயிரிழப்பு

east tamil

Leave a Comment