யாழ்ப்பாணம், கொக்குவிலில் தொலைபேசி விளையாட்டிற்கு அடிமையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
கொக்குவில், தாவடி பகுதியில் நேற்று அதிகாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதான இளம் குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டார்.
பப்ஜி கேமுக்கு அடிமையான இவர், அதிலேயே மூழ்கியிருந்துள்ளார். நேற்று முன்தினம் குடும்பத்தினர் படுக்கைக்கு சென்ற பின்னர் படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
காலையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மனைவி தெரிவித்தார்.
இரண்டு வாரங்களின் முன்னர் இளவாலை பொலிஸ் பிரிவில்,பப்ஜி கேமுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் தற்கொலை செய்திருந்தார். விளையாட்டில் தோல்வியடைந்ததால் அவர் உயிரை மாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1