26.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இலங்கை

மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை; ஊழல் பேர்வழிகள் நிர்வாகத்தில் வேண்டாம்: யாழில் வைத்தியர்கள் போராட்டம்

மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை அரச நிர்வாகத்தில் ஊழல் பேர்வழிகள் வேண்டாம் என பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை வைத்தியர்கள் இரண்டு மணி நேர கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் சுகாதாரத்துறை அழிக்காதே மக்களின் உயிர்களுடன் விளையாடாதே போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்களின் மருத்துவத் துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவு சத்திர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதிலும் மற்றும் மருந்துவப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களின் சுகாதாரத் துறையுடன் விளையாடாமல் உரிய தீர்வை விரைவில் முன்வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸுடன் மோதிய இரண்டு பஸ்கள் – 29 பேர் காயம்

east tamil

நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

east tamil

நீரில் மூழ்கி சிறுவன் பலி

east tamil

Leave a Comment