பல்கலைகழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்!

Date:

பத்தரமுல்ல, தியனஉயன, பொல்துவ சந்திக்கு அண்மையாக, பாராளுமன்ற நுழைவு வாயிலில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் இன்று பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்து பத்தரமுல்லையில் உள்ள பாராளுமன்ற வளாகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

ஹைலெவல் வீதியின் ஊடாக நுகேகொட, நாவல ஊடாக ராஜகிரிய ஊடாக பத்தரமுல்லைக்குள் நுழைந்து, பாராளுமன்ற நுழைவாயிலிற்குள் பிரவேசிக்க முயன்றனர்.

பொலிசாரின் முதல் தடுப்புக்களை பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றிகரமாக தாண்டிச் சென்றதைத் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், பொலிஸாரால் அமைக்கப்பட்ட இரண்டாவது தடையை நெருங்கியதும், மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்றும் நாளையும் (06) பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்படும் என பொலிஸார் இன்று காலை அறிவித்துள்ளனர்.

பாராளுமன்ற அமர்வின் போது இடம்பெற்று வரும் போராட்டங்களினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உத்தியோகத்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள வியாபாரம் – சொந்த நிலத்திற்கு செல்ல முடியாமல் வலி வடக்கு மக்கள் அவதி!

​யாழ்ப்பாண நகரில்  சோள வியாபார நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டு வருவதால்...

வலிகாமம் வடக்கு சபைக்கு நீதிமன்ற நிவாரணம்

தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதி விடுவிப்புக்கு முயற்சித்த வலிகாமம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்