நாளை (4) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபாநாயகரிடம் அவகாசம் கோரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவுபடுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் திலான் பெரேராவை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு பெரமுன முன்மொழிந்துள்ளது.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் பெரேரா இந்த பிரேரணையை நிராகரித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1