பாராளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே தாம் இந்த யோசனையை முன்வைத்ததாக ராஜகருணா தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் பிரேரிக்கப்பட்டமைக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும், கட்சித் தலைவர்களுடன் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.