‘போராட்டக்காரர்களை போட்டுத்தள்ள முடியாதா?’: நிறவெறிக்கு எதிரான எழுச்சியை அடக்க ஜனாதிபதி ட்ரம்ப் கேட்ட யோசனை!

Date:

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2020ஆம் ஆண்டு வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை “சுட்டுத் தள்ள முடியாதா?” என்று கோபம் பொங்கக் கேட்டதாக அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த காலக்கட்டத்தில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட்  பொலிசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நிறவெறிக்கு எதிராக வோஷிங்டனில் போராட்டங்கள் வெடித்தன.

அப்போது ஜனாதிபதி ட்ரம்ப்புடன் அவரது அலுவலகத்தில் தாம் இருந்ததாகவும், ஜனாதிபதி கடுங்கோபத்துடன் ஆர்ப்பாட்டங்களைப் பற்றிப் பேசியதாகவும் எஸ்பர் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களைச் சுட்டுத் தள்ள முடியாதா? கால்கள் போன்ற இடங்களில் சுட்டுக் கட்டுப்படுத்த முடியாதா? என்று ட்ரம்ப் கேட்டதாக எஸ்பர் தமது வாழ்க்கைக் குறிப்புப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் இராணுவத்தைப் பணியமர்த்த வகை செய்யும் 200 ஆண்டு பழைமையான சட்டத்தை அமலுக்குக் கொண்டுவர ட்ரம்ப் விடுத்த அழைப்புக்குத் தாம் எதிர்ப்புத் தெரிவித்ததாக எஸ்பர் குறிப்பிட்டிருந்தார்.

அதனால் சினமடைந்த ட்ரம்ப் தம்மை 2020 நவம்பரில் பதவிநீக்கம் செய்ததாக அவர் ‘A Sacred Oath’ எனும் தமது புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்