இடைக்கால அரசில் புதிய அமைச்சரவை நியமனத்திற்காக பேச்சு நடத்த நியமிக்கப்பட்ட குழுவை பார்க்கின்ற போது, மஹிந்த ராஜபக்ஷ எவ்வளவோ பரவாயில்லையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
யாழில் இன்று (2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்துத்தான் வாக்களிக்க வேண்டும். ஆனால், நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றியடைந்து, அமையும் புதிய அமைச்சரவை இதைவிட மோசமாக இருந்தால்? சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாகி விடும்.
இடைக்கால அரசாங்கத்தில் யார் யார் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது என்பது பற்றி ஜனாதிபதியுடன் பேச சுயேட்சை அணி, 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளனர். அதில் அங்கம் வகிப்பவர்களின் பெயர்கள் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, டிரான் அலஸ்.
இதைவிட, மஹிந்த ராஜபக்ச எவ்வளவோ பரவாயில்லை என்றார்.