பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாட்டை மேற்கொண்டார்.
இன்று காலை 9 மணிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருடன் யாழிற்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் வருகை தந்தனர்.
ஆலய வழிபாட்டிற்கு பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இதேவேளை, இந்திய அரசின் நிதியுதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தையும் பார்வையிட்டார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1