26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

அவுஸ்திரேலிய மருத்துவ நிறுவனத்தின் ஊழல் விசாரணை: இலங்கையில் கிளம்பியது பூதம்!

அவுஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ நிறுவனம் ஒன்றின் பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் ஏபிசி மீடியா நெட்வொர்க் இது குறித்து நீண்ட விளக்கத்தை அளித்துள்ளது.

Estre Le Aspen மருத்துவ நிறுவனத்தின் மீதான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண ஒப்பந்தத்தை மீறிய விசாரணையில் இந்த தகவல்கள் வெளியானதாக அவுஸ்திரேலியாவின் ஏபிசி மீடியா நெட்வொர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியின்படி,

இலங்கையின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் தொடர்பில் குறித்த நிறுவனம் பணமோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உபகரணங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் $18.8 மில்லியன் திட்டத்திற்கு நிறுவனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் ஊடகவியலாளர்கள், அந்த நிறுவனம் மருத்துவமனைக்கு மருத்துவ சேவை வழங்கியதா என கேள்வியெழுப்பிய போது, நிறுவனத்தினர் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தங்கள் ஒரு துணை ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Aspen இலங்கையில் தனது முதல் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிவர்த்தனையை பிரித்தானிய விர்ஜின் தீவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான Saber Vision Holdings நிறுவனத்திற்கு செய்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த நிமல் பெரேராவுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் இலங்கையில் உள்ள ராஜபக்ச குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவுக்காக பணம் வசூலித்ததாக அவர் வாக்குமூலம் அளித்து அதன் விளைவாக நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணப் பணியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நிமல் பெரேராவிடம் வினவியபோது, ​​இத்தாலிய வர்த்தகர் ஒருவரினால் தனது கணக்குகளுக்கு பணம் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இத்தாலிய தொழிலதிபரின் முகவரி அல்லது தொலைபேசி எண்கள் மூலம் அடையாளத்தை சரிபார்க்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saber Vision Holdings குறித்து வினவியபோது, ​​அந்த நிறுவனம் குறித்து தனக்கு தெரியாது எனவும், அந்த நிறுவனம் தனது இத்தாலிய நண்பருக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனவும் நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த நிறுவனம் நிமல் பெரேராவிற்கு சொந்தமானது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்த நிறுவனம் ஊழல் மோசடி தொடர்பாக பல்லாயிரக்கணக்கான டொலர்களை பெற்றுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment