வட்டவளை -மவுண்ட்ஜீன் தோட்ட இளைஞர், யுவதிகளால் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதிக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (1) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மவுண்ட்ஜீன் தோட்டத்திலிருந்து ஆரம்பித்த ஆர்பாட்டமானது, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியுடாக வட்டவளை நகரத்தை நோக்கிச் சென்றது.
இதன்போது “இந்த அரசாங்கம் எமக்கு வேண்டாம், உகண்டாவில் உள்ள கருப்பு பணம் எங்கே, தோட்ட தொழிலாளர்களை சுரண்டி பிழைத்தது போதும் அடிப்படைசம்பளத்தை அதிகரி” போன்ற கோசங்களையை எழுப்பிய வண்ணம் பதாகைகளை ஏந்தியவாறு வட்டவளை நகர் வரை சென்றனர்.
பின்னர் வட்டவளை பஸ் தரிப்பிடத்துக்கு முன் நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.




