செக்ஸ் தான் சிறந்த ஒர்க்அவுட் என்று நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிரா கஷ்யப் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா. இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி தொகுத்து வழங்கும் ஷேப் ஆஃப் யூ நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் குரானாவின் காதல் மனைவியான தாஹிரா கஷ்யப் கலந்து கொண்டார்.
உடல் மற்றும் மனநலம் பற்றிய அந்த நிகழ்ச்சியில் செக்ஸ் வாழ்க்கை பற்றி பேசியிருக்கிறார் தாஹிரா.
உங்களின் புத்தகத்தில் செக்ஸ் பற்றி எழுத சவுகரியமா என்று தாஹிராவிடம் ஷில்பா கேட்டார். அதற்கு தாஹிராவோ,
அது செக்ஸ், கிரேட், மேலும் நல்லதும் கூட. அதனால் அதை பற்றி ஏன் எழுதக் கூடாது. கலோரிகளை குறைக்க செக்ஸ் தான் சிறந்த ஒர்க்அவுட் என்றார்.
மேலும் தன் கணவரின் வாழ்க்கை பயணம், உடற்பயிற்சி உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் தாஹிரா.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் தாஹிரா. அதனால் தான் ஷில்பா கேட்டதும் இப்படி பதில் அளித்திருக்கிறார். கல்லூரியில் படித்தபோதே ஆயுஷ்மான் குரானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தாஹிரா.
அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். டாஃபி என்கிற படத்தை இயக்கியவர் தாஹிரா என்பது குறிப்பிடத்தக்கது.




