25.5 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

சன் ரிவி உரிமையாளர் என நடித்த மோசடி பேர் வழி: ஏமாந்து காதல் வலையில் விழுந்த இலங்கை அழகிக்கு மற்றொரு அதிர்ச்சி; சொத்துக்கள் முடக்கம்!

நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

நேற்று (30) இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடி ரூபாயில், 5.71 கோடி ரூபாய் பெறுமதியான விலை உயர்ந்த பொருட்களை சந்திரசேகர் ஜாக்குலினுக்கு பரிசாக கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7.27 கோடியை முடக்கியுள்ளது.

பண மோசடி வழக்கில் கைதாகி கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் 200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கு விபரம் வெளியான பின்னர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும், சுகேஷ் சந்திரசேகரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

இதன்பின் அமலாக்கத்துறை விசாரணையில் நடிகைகள் சிலருக்கு சுகேஷ் சந்திரசேகர் விலை உயர்ந்த பொருட்கள் வழங்கி, வலையில் வீழ்த்தியிருந்தது தெரிய வந்தது.

ஜாக்குலினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் சன் தொலைக்காட்சி உரிமையாளர் என சுகேஷ் கூறியதை ஜாக்குலின் நம்பி, இருவரும் காதலர்களாக இருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் அரசியலை ஒழிக்க உறுதி – ஜனாதிபதி

east tamil

மருந்து உற்பத்தி விரைவில் அதிகரிக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

Leave a Comment