சீனாவின் ஜெஜியாங் மாநிலத்தில் மறைந்த தனது எஜமானர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது ஒரு நாய்.
சீன ஊடகத் தகவலின்படி, நாயின் உரிமையாளர் காலமாகியதை தொடர்ந்து, அவருடைய மகன் செல்லப்பிராணியைத் தம்முடன் நகரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
இருப்பினும் ஒரு வாரத்திற்குப் பிறகு நாய் மீண்டும் தனது உரிமையாளர் இருந்த கிராமத்துக்கே திரும்பியுள்ளது. நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 40 கிலோமீட்டர்.
மறைந்த உரிமையாளரின் அண்டைவீட்டார் அழைத்துச் சென்றாலும் மீண்டும் மீண்டும் உரிமையாளருக்காகக் காத்திருக்க வீட்டின் முன்னே நாய் நிற்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
மழை, வெயில் எனப் பாராமல் உரிமையாளருக்காகக் சோகத்துடன் நிற்கும் விசுவாச நண்பனைக் கண்டு மனம் நெகிழ்ச்சியடைவதாக அண்டைவீட்டார் தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.