‘அரசுக்கு ஆதரவு வழங்கினால் ஊருக்கு வர வேண்டாம்’: ஈ.பி.டி.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்!

Date:

அரசுக்கு ஆதரவு வழங்காதே எனத் தெரிவித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் அலுவலகம் இன்று (28) காலை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து, மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பிதுடன், ஜனாதிபதி கோட்டா, பிரதமர் மகிந்த உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், திலீபன் எம்.பியே அரசுக்கு ஆதரவு வழங்காதே, திலீபன் எம்.பியே அரசுக்கு ஆதரவு வழங்கினால் ஊருக்கு வராதே எனவும் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரார்கள் அலுவலகப் பகுதியில் கறுப்பு கொடியை பறக்க விட்டதுடன், அலுவலக மதிலில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காதே என தமிழிலும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினால் ஊருக்கு வராதே என சிங்களத்திலும் பெரிதாக பொறித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

குறித்த போராட்டடத்தில் இலங்கை வங்கி ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், தபால் நிலைய ஊழியர்கள், ஆசிரிய சங்க ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபய வெளிநாடு செல்ல தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணையின் காரணமாக, முன்னாள்...

இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது!

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க, பாகிஸ்தானின்...

வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது!

வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்