நாமலுக்கு எதிரான பணமோசடி வழக்கு செப்ரெம்பரில் விசாரணை!

Date:

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.

கோவர்ஸ் கார்ப்பரேட் சேர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஊடாக 30 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 241வது பிரிவின்படி, இந்த வழக்கில் இரண்டாவது மற்றும் ஆறாவது சந்தேகநபர்கள் ஆஜராகாத நிலையில், வழக்கு விசாரணையைத் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2013 மற்றும் 2014 க்கு இடையில் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான நிறுவனத்தில் (Gowers Corporate Services (Pvt) Limited) ரூ.30 மில்லியன் மோசடி செய்ததாக நாமல் ராஜபக்ஷ, இந்திக கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, நித்ய சேனானி சமரநாயக்க மற்றும் கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 பிரிவுகளின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

கொழும்பு 5 ஐச் சேர்ந்த கோவர்ஸ் கோர்ப்பரேட் சேர்வீசஸ் நிறுவனம், சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒருங்கிணைப்புச் சேவைகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்கவின் முறைப்பாட்டுக்கு அமைய நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்