Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் லு பென்னை தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியான மக்ரோன்!

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது தீவிர வலதுசாரிப் போட்டியாளரான மரைன் லு பென்னை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்று கருத்துக்கணிப்பாளர்களின் ஆரம்ப கணிப்புகள் காட்டுகின்றன.

முதல் கணிப்புகள் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்ட வாக்களிப்பில் மக்ரோன் 57.65 சதவீத வாக்குகளைப் பெற்றதாக கணிப்புக்கள் தெரிவித்தன.

மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற 66.10 வீத வாக்குகளை விட குறைவான வாக்குகளையே வென்றிருக்கிறார். பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ஒருவர் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெறுவது கடந்த இருபது ஆண்டுகளின் பின்னர் இது முதல் முறை ஆகும். தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற மூன்றாவது பிரான்ஸ் ஜனாதிபதியாக மைக்ரோன் மாறியுள்ளார். இல் ஜாக் சிராக் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றிருந்தார். 

 தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சியின் (Rassemblement National அல்லது RN) வேட்பாளரான லு பென் 41.8 சதவீத வாக்குகளைப் பெற்றார். கடந்த மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். இம்முறையே அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈபிள் கோபுரம் அமைந்துள்ள Champ-de-Mars ஆற்றிய வெற்றி உரையில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

“நான் இனி ஒரு முகாமின் வேட்பாளர் அல்ல, ஆனால் நம் அனைவருக்கும் தலைவர்,” என்று அவர் கூறினார்.

விடுமுறை காரணமாக, இறுதிச் சுற்று தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்குமென எதிர்பார்த்ததை போலவே முடிவுகள் அமைந்துள்ளன. இறுதிச் சுற்றில் வாக்களிக்காதோர் எண்ணிக்கை 28.2 வீதமாக அதிகரித்துள்ளது. பிரெஞ்சு தேர்தல் வரலாற்றில் 1969 ஆம்ஆண்டுக்குப் பின் இது மிக உச்ச எண்ணிக்கை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதிச் சுற்று முடிவுகள் ஏப்ரல் 27ஆம் திகதி வெளியாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Pagetamil

போர்நிறுத்தம் பற்றிய புடினின் கருத்துக்கு டிரம்பின் எதிர்வினை

Pagetamil

’30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார்; ஆனால்…’: புடின்

Pagetamil

‘தமிழ் அரசு கட்சியை உடைக்க சதி’: சீ.வீ.கே.சிவஞானம் பரபரப்பு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மிகப்பெரிய கொள்கை மாற்றம்: உள்ளூராட்சி தேர்தலில் சில தரப்புக்களுடன் கூட்டணி!

Pagetamil

Leave a Comment