டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்க முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஆதரவு!

Date:

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் நகர்வை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கைளவில் தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பொரு  ளாதார நெருக்கடியையடுத்து, மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள.நிலையில், அரசியல் ஸ்திரமில்லாத நிலைமையும் ஏற்பபட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் பாதவி விலக வேண்டுமென பொதுமக்கள் பேராடி வருகிறார்கள்.  ஆளுந்தரப்பிற்குள்ளும் மோதல் வலுத்து வருகிறது.

இதேவேளை, ஆளுந்தரப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்கும் நகர்வொன்று இடம்பெறுகிறது.

பெரமுனவிலிருந்து பிரிந்த 11 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த நகர்வை செயற்படுத்தி வருகிறார்கள்.

ஐக்கிய  மக்கள் சக்தி சைமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை, அரசிலிருந்து பிரிந்தவர்கள் ஆதரித்து வெற்றிபெற வைப்பதென்றும், பின்னர் அரசிலிருந்து பிரிந்தவர்கள் ஆட்சியமைப்பதென்றும் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து  இரண்டு தரப்புக்களிற்குமிடையில் பல சுற்று கலந்ரையாடல்கள் நடந்துள்ளன.

டலஸ் அழகப்பெருமவை பிரதமர் ஆக்கும் நகர்வை ஆதரிக்கலாமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையளவில் தீர்மானித்துள்ளது

இது குறித்த கலந்துரையாடல்கள் கூட்டமைப்பிற்குள் இடம்பப்று வருகின்றன.

 

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்