காலியாகிறது ராஜபக்‌ஷக்கள் கூடாரம்: ஒவ்வொருவராக கழறும் எம்.பிக்கள்!

Date:

அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியதை தான் ஆமோதிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தற்போதைய அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கலாநிதி சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று ருவிற்றர் பதிவில் இதனை தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும். 8 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குள் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு சமாளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

நேற்று முன்தினம் (22) முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, அமைச்சரவை மற்றும் பிரதமரை பதவி விலகுமாறும், சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக அமைக்குமாறும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆளுந்தரப்பில் இருந்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழன்று செல்வதையடுத்து, நாடாளுமன்ற பெரும்பான்மைக்கும் குறைவான பலமே அரசிடம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

விகாரைக்குள் ‘கசமுசா’: மற்றொரு மன்மதராசா சிக்கினார்!

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி...

தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சாலேவுக்கு மனநோயாம்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபய வெளிநாடு செல்ல தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணையின் காரணமாக, முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்