Pagetamil
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 3ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் 3வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் தெமட்டகொடையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 269 பேர் கொல்லப்பட்டனர்.

400க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், பலர் அங்கவீனமாகினர்.

நீர்கொழும்பு, கட்டானாவில் உள்ள புனித செபஸ்தியன் தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாத குழு முதலில் தாக்குதல் நடத்தியது, காலை 8:45 மணிக்கு முதல் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து 30 நிமிடங்களுக்குள் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், கிங்ஸ்பரி ஹோட்டல், ஷங்ரிலா கொழும்பு, மட்டக்களப்பு சியோன் தேவாலயம் சினமன் கிராண்ட், கொழும்பு ஆகியவற்றில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.

பலியானவர்களில் 45 குழந்தைகளும், 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அடங்குவர்.

தெஹிவளையில் உள்ள சுற்றுலா விடுதியில் அன்று பிற்பகல் 1:30 மணியளவில் குண்டு வெடித்தது.

பாதுகாப்புப் படையினர் தாக்குதல்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து, தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் மேலும் இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் தற்கொலைப் படை தீவிரவாதிகளில் ஒருவருமான சஹ்ரான் ஹாஷிம்தான் இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது பின்னர் தெரியவந்தது.

சஹ்ரான் ஹாஷிம் மற்றும் பல அடையாளம் தெரியாத நபர்கள் அதன் பின்னணியில் ISIS கொடியுடன் உறுதிமொழி எடுப்பது போன்ற வீடியோவும் பரப்பப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் விசாரணைகளை முடித்து அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.

இன்றுவரை தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நடந்து வருகின்றன, ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாதுகாப்பு செயலாளர் அண்மையில் வெளியிட்ட தகவலில், இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

81 நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று, கட்டானை, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பிரதான ஆராதனை நடைபெறவுள்ளது.

முதல் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் காலை 8:45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, தேவாலயங்களில் ஆராதனை இடம்பெறும்.

அனைத்து தேவாலயங்களிலும் காலை 8:45 மணிக்கு மணிகள் அடிக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் விளக்குகளை ஏற்றி வைக்குமாறும் கொழும்பு பேராயரின் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுண்டிக்குளத்தில் கடற்படையினரால் மர்ம பொருள் மீட்பு

east tamil

கட்டைக்காட்டு பகுதியில் புதிதாக போடப்பட்ட 15 மின் விளக்குகள்

east tamil

பலுகஸ்வெவவில் சிசுவை கொலை செய்த தாய் கைது

east tamil

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

Pagetamil

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

Leave a Comment