26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

‘தயவு செய்து வீட்டுக்கு முன்னால் போராடாதீர்கள்… மகள் சாப்பிடுகிறாரில்லை’: கெஞ்சிக்கேட்கிறார் ‘பல்டி’ அமைச்சர்!

தனது இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என, ‘பல்டியடித்து’ பதவியேற்றுள்ள விவசாய இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (15) ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த மன்றாட்டமான கோரிக்கையை விடுத்தார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி, அரசிற்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்ட பின்னர், சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவை ஆளுந்தரப்பு வலைவீசி பிடித்திருந்தது.

சாந்த பண்டார கட்சிக்கு துரோகமிழைத்து விட்டு, பதவியை பெற்றுக்கொண்டதாக சு.க அறிவித்தது.

இந்த விதமாக பல்டியடிப்பவர்கள் வழக்கமாக கூறும் விளக்கத்தையே சாந்த பண்டாரவும் கூறினார். மக்கள் நலன் சார்ந்து இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார்.

எனினும், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வியாழன் (14) மஹரச்சிமுல்லவில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தனது வீட்டுக்கு எதிரே இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, தனது சிறிய மகள் அச்சமடைந்து சாப்பிடாமல் உள்ளதாகவும், தனது வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச வேலைவாய்ப்புகள் என்ற போர்வையில் தகவல் திருட்டு

east tamil

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

east tamil

இலங்கையில் விரைவில் சூரிய மின்னுற்பத்தி

east tamil

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

Leave a Comment