ஸ்வீடன், பின்லாந்தை நேட்டோவில் சேர்த்தால் பால்டிக் பகுதியில் அணு ஆயுதங்களை நிறுத்துவோம்: ரஷ்யா எச்சரிக்கை

Date:

பின்லாந்தும் ஸ்வீடனும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் சேருவது குறித்து யோசித்து வருகின்றன. இது தொடர்பாக அடுத்த சில வாரங்களில் பின்லாந்து முடிவு எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்நிலையில், 2008 முதல் 2012 வரை ரஷ்ய ஜனாதிபதியாக இருந்தவரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான திமித்ரி மெத்வெதேவ் நேற்று கூறும்போது, “ஸ்வீடன் மற்றும் பின்லாந்தை நேட்டோவில் இணைத்தால் ரஷ்யா தனது இராணுவ சமநிலையை மீட்டெடுக்க பால்டிக் கடல் பகுதியில் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைகளை பலப்படுத்த வேண்டிருக்கும். அணு ஆயுதம் இல்லாத பால்டிக் பற்றி இனி பேச முடியாது. இன்று வரை ரஷ்யா அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் அத்தகைய நடவடிக்கைக்கு நாங்கள் தள்ளப்பட்டால் அதற்கு காரணம் நாங்கள் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்