இந்திய மத்திய நிதியமைச்சருடன், மிலிந்த மொரகொட ஆலோசனை: இலங்கைக்கு கூடுதலாக 200 கோடி டொலர் நிதியுதவி!

Date:

இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-இலங்கை இடையேயான பொருளாதார கூட்டுறவு நிலவரம் குறித்தும் இந்தியாவின் உதவியை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இலங்கையில் சீனா இழந்த செல்வாக்கை மீட்க இந்தியா முயற்சிப்பதால், இலங்கைக்கு மேலும் 200 கோடி அமெரிக்க டொலர் கடன் அளிக்க இந்தியா தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு கடன்களை இப்போது திருப்பிச் செலுத்த போவது இல்லை என இலங்கை அறிவித்திருப்பது கவலை அளித்தாலும், இலங்கைக்கு இந்தியாவால் 200 கோடி டொலர் அளவுக்கு கடன் அளிக்க முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசியான் கிளியரிங் யூனியனுக்கு, இலங்கை செலுத்த வேண்டிய 200 கோடி அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதிலும் இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இந்த ஆலோசனை குறித்து இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘பொருளாதார திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து சர்வதேச நிதியத்திடம் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் நிதி தேவைக்கு, கைகொடுப்பது, இலங்கைக்கு உதவிய முதல் நாடாக இந்தியா இருக்கும்’’ என தெரிவித்துள்ளது.

சார்க் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதம், இந்தியா 40 கோடி அமெரிக்க டொலர் நிதியதவி அளித்தது. மேலும் ஆசியான் கிளியரிங் யூனியனுக்கு 51.52 கோடி அமெரிக்க டொலர் கடன் செலுத்துவதையும், 2022 மே 6 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தது.

இந்தியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய 50 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான புதிய கடனையும் இந்தியா வழங்கியது. மேலும் உணவு, மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை இந்தியாவிடம் இருந்து கொள்முதல் செய்ய 100 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான கடனை இந்தியா அளித்துள்ளது.

இந்நிலையில் நிதி நெருக்கடியை சமாளிப்பதில் சர்வதேச நாடுகளின் ஆதரவையை பெற இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து இலங்கை தூதர் மிலிந்த மொரகொட, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஆலோசித்தார். வெளிநாட்டு கடனை நிறுத்திவைக்க இலங்கை அரசு முடிவு செய்தது குறித்தும் அவர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கினார். கடன்களை மாற்றியமைப்பதில், பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அதிகாரிகள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு முன்னேற்றத்தை கண்காணிக்க, கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்துவது குறித்து இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாஷிங்டன் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்துக்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கை அமைச்சக குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்